சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து A9 வீதியில் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாற்று வீதிகள் பயன்படுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் மாற்று வீதியால் பயணித்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
காலை 11.30 மணியளவில், கணேசபுரம் பகுதியில் கார் மற்றும் வேனும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
விபத்தில் வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.