மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி
லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் சந்தித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இராணுவத் தளபதியையும் அவர் சந்தித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.