பாகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.
இன்று அதிகாலை 12.57 மணி அளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அத்தோடு அதில், "ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் 17-02-2024 அன்று 00.57.09 மணிக்கு பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் பாகிஸ்தானில் உணரப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.