பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்

keerthi
0

 


பூமியை நோக்கி 890 அடி விட்டம் கொண்ட அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணியளவில் பூமியை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்த சிறுகோள் பூமியின் மீது மோதும் அபாயம் இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

நமது சூரிய அமைப்பில், சுமார் 2,350 அபாயகரமான சிறுகோள்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top