கடவத்த மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு மாணவிகளுக்கு கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மாணவிகளை அங்கு அழைத்துச் சென்ற ஜனாதிபதி, அமைச்சரவை என்றால் என்ன, அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
நாட்டின் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற பிரதான இடமான அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்துரையாடும் சந்தர்ப்பம் பாடசாலை மாணவிகளுக்கு கிடைத்தமை விசேட அம்சமாகும்.