தோப்பூர் கமநல சேவைநிலையத்துக்குட்பட்ட தோப்பூர் பிரதேச விவசாயிகள் திடீர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கைக்கு அறுவடைக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் திடீர் மழை காரணமாக பயிர்கள் சாய்ந்தமையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதோடு அறுடையின் போது மேலதிக செலவை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.