யாழ்ப்பாணத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.