அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “பியூமா” என்ற குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (17) அதிகாலை இலங்கை வந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த பெண்ணிடம் இருந்து சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பியூமாவின் மனைவியின் நண்பி எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், விசாரணை அதிகாரிகளிடம் தான் செய்த குற்றங்கள் குறித்து பல முக்கிய உண்மைகளை “பியூமா” வெளிப்படுத்தியுள்ளார்.
தானும் கூடு சலிந்துவும் சிறுவயதில் இருந்தே சிறந்த நண்பர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.