யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் சென்று அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.