ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணிக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலின் போது இணக்கப்பாடற்ற நிலை ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலைக்கப்பட்ட ஶ்ரீ லங்கா சுதந்திர மகளிர் முன்னணிக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கு நேற்று வேளையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடினர்.
கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, புதிய உறுப்பினர் சபையை தெரிவு செய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.