மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அம்மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலுக்கமைய சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை, பொழுதுபோக்குக்காக அவர்களுக்கு LED தொலைக்காட்சிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது சாதனைகளை புரிந்துகாட்டிய மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.