காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நாஜிக்களின் யூதப் படுகொலைக்கு ஒப்பிட்ட பிரேசில் ஜனாதிபதி லுௗலா டா சில்வா, இஸ்ரேலுக்கான பிரேசில் தூதுவரை திரும்ப அழைத்துள்ளார். மறுபுறம் பிரேசில் ஜனாதிபதியை வரவேற்க மாட்டோம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
“காசாவில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருப்பது வரலாற்றில் எந்தத் தருணத்திலும் நிகழ்ந்ததில். உண்மையில் ஹிட்லர் யூதர்களை கொல்ல தீர்மானித்தபோது அது நிகழ்ந்தது” என்று லுலா கடந்த ஞாயிறன்று கூறியிருந்தார்.
இரண்டாம் உலகப் போரிய நாஜிக்களால் திட்டமிட்ட ரீதியில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
லுௗலாவின்் இந்தக் கருத்து இஸ்ரேல் மற்றும் பிரேசில் இடையிலான இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.
லுௗலா தனது கருத்தை வாபஸ் பெறும் வரை அவரை இஸ்ரேல் வரவேற்காது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காட்ஸ் அறிவித்தார். இதற்கு பதிலடியாக பிரேசில் வெளியுறவு அமைச்சுஇஸ்ரேல் தூதுவர் அழைத்து அதிருப்தியை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆலோசனை பெறுவதற்காக இஸ்ரேலுக்கான பிரேசில் தூதுவரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.