நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச் சட்டம் எனும் விடயத்துக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சுகளும் பொறுப்புகளும் எனும் தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் கொண்டு வந்து மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி அறிவித்லொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் குறித்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.