உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஆயுதங்கள் மீதான கேள்வி அதிகரித்த சூழலில், சாதனை அளவாக அமெரிக்கா கடந்த ஆண்டில் வெளிநாடுகளுக்கு 238 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை விற்றுள்ளது.
அமெரிக்கா நேரடியாக 81 பில்லியன் தொடருக்கு ஆயுதம் விற்றிருப்பதோடு அது 2022 ஆம் ஆண்டை விட 56 வீத அதிகரிப்பாக உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எஞ்சிய ஆயுதங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களினால் வெளிநாடுகளுக்கு நேரடியாக விற்கப்பட்டுள்ளன.
தனது இராணுவத்தை விரிவுபடுத்தி வரும் உக்ரைனின் அண்டை நாடான போலந்து மிகப்பெரிய கொள்வனவாளர்களில் ஒன்றாக உள்ளது. அதேபோன்று ஜெர்மனி மற்றும் செக் குடியரசும் அதிக ஆயுதங்களை வாங்கியுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத விற்பனை நாடான ரஷ்யாவில் இருந்து விலகி நிற்கும் நாடுகளாலும் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவுக்கு வெளியில் தென் கொரியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து அதிக ஆயுதங்களை வாங்கியுள்ளன.