கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் திருகோணமலையில் இருந்து தென் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விதத்தில், பெண் ஒருவர் பலியானதுடன், 7 பேர் படுகாயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) மாலை கந்தளாய் ஹபரண வீதி, அலுத்ஓயா பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை ஹத்ரஸ்கொண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்