விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடத்துக்கு, எல்.கே. ஜகத் பிரியங்கரவின் பெயரை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இவர், புத்தளம் மாவட்டத்துக்கான பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்துக்கான விருப்பு வாக்கு பட்டியலின் பிரகாரம் ஜகத் பிரியங்கர காலம்சென்ற சனத்நிஷாந்தவுக்கு அடுத்த இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.