அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (27.02.2014) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸார் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த நபர்களை கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் மீட்டுள்ளனர்.