மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (13.2.2024) இடம்பெற்றுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான் பேரல்லாவெளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கருணா அம்மானுக்கு சொந்தமான பண்ணையில் வயல் வேலைக்காக நின்ற இருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.
சின்ன நுரைச்சோலை - குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும், அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.