என்கிட்ட ஒரண்ட இழுக்குறதுக்காகவே உங்க அம்மா அப்பா பெத்து போட்டு இருக்காங்களா? இதுதான் இப்ப திரிஷாவின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு சமீப காலமாக அவர் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தியாக மாறி வருகிறார்.
ஏற்கனவே விஜய்யுடன் சேர்த்து வந்த கிசுகிசு, மன்சூர் அலிகான் பேச்சு என நொந்து போயிருந்த திரிஷாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது நேற்று வைரலான வீடியோ. அதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு திரிஷா குறித்து அவதூறான ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்.
பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவாக சேரன் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கினார்கள். ஆனால் திரிஷா நீண்ட நேரம் அமைதி காத்த நிலையில் ஒரு வழியாக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து சட்டரீதியாக செல்ல போவதாகவும் கூறியிருந்தார்.பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை உணர்ந்த அந்த அரசியல்வாதியும் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். இதனால் இந்த பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்தது. ஆனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக வேறு ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது.
அதாவது திரிஷாவுக்கு இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அதனால் முடிந்த அளவு படத்தில் நடித்துவிட்டு சில வருடங்கள் கழித்து விஜய்யின் கட்சியில் சேரலாம் என அவர் முடிவெடுத்திருந்தாராம். ஆனால் இந்த பிரச்சனை உடனடியாக அவரை கட்சியில் சேரும் அளவுக்கு தூண்டி இருக்கிறது.
ஏனென்றால் முன்னணி நடிகையாக இருந்தால் கூட அரசியல் பலம் என்பது முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதன் காரணமாகவே தற்போது அரசியலுக்கு வர முடிவு எடுத்துள்ளார். இதனால் திரிஷா ஜெயலலிதா போல் மாறவும் வாய்ப்பு இருக்கிறது.எம்ஜிஆரின் கட்சிக்கு எப்படி ஜெயலலிதா ஒரு பில்லர் போல் இருந்தாரோ அதேபோன்று விஜய் கட்சிக்கும் ஒருவர் கிடைத்துவிட்டார். இப்படியாக அந்த அரசியல் பிரமுகர் தேவை இல்லாமல் திரிஷாவை பற்றி பேசி இப்போது அவரை ஜெயலலிதா ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டார்.