கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யுமாறு கோரி அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக கண்டனப்பேரணியொன்று நேற்று நடைபெற்றது.
கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் இக்கண்டனப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எச்.எம்.எம் ஹரீஸ் நேரடியாக இவர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் இவ்விடயத்துக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.