பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் உள்ள கில்கிட் நகர உள்ளூர் வர்த்தகர்கள், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் திருட்டு மற்றும் சட்டவிரோதச் சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்புக் குறைபாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து இந்த வர்த்தகர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.
கில்கிட் நகரைச் சேர்ந்த உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், “பாதுகாப்புப் படையினர் அல்லது நிர்வாகத்திடம் நாங்கள் நீதி கோருகிறோம். அவர்கள் குற்றவாளியை எங்கள் முன் ஆஜர்படுத்த வேண்டும். நான் முறையாக வரி செலுத்தி வருகிறேனென்றால், என்னையும் எனது சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும், பிறகு ஏன் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கின்றனவா?”.
அண்மையில் தனது கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை விவரித்த வர்த்தககர் ஒருவர், “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறேன், 20 நிமிடங்களில் கொள்ளையர்கள் என் கடைக்குள் நுழைந்து அனைத்தையும் கொள்ளையடித்துவிட்டு வெளியேறினர். ” என்று தெரிவித்தார்.
“சம்பவம் தொடர்பாக, நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டோம், அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் எதுவும் செய்யவில்லை. குறிப்பிடத்தக்க பதவியில் உள்ள எவரும் இந்த விஷயம் தொடர்பாக எங்களைச் சந்திக்கவில்லை. இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. இது போன்ற குறைந்தது 12 சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வியாபாரி கூறுகையில், “எங்கள் சக வியாபாரிக்கு நடந்த சம்பவம் முதல் சம்பவமல்ல, 24 மணி நேரமாகியும் இதுவரை எங்களின் கோரிக்கைகளை கேட்க யாரும் வரவில்லை. ஏற்பட்ட நட்டம் குறித்து நண்பரிடம் கேட்டதில்லை” என்று தெரிவித்தார்.
அனைத்து வியாபாரிகளின் ஏகோபித்த கோரிக்கையை கூறிய வர்த்தகர், “பாதுகாப்புக்கான கட்டணம் என்ற பெயரில் அதிகாரிகள் பணம் கேட்கின்றனர். பிறகு ஏன் எங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை? இந்த சம்பவங்களில் இருந்து எங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும்.எங்களுக்கு பாதுகாப்பு அல்லது இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளிக்க வேண்டும், ஆனால் இது வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செருப்பு வியாபாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு பணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஐந்து நாட்கள் தாமதித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. உரிய நேரத்தில் பணம் கொடுத்தாலும் இதுதான் நடக்கிறது. எங்களிடம் பணம் எடுப்பதை நிறுத்துவது நல்லது. நாங்கள் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துக் கொள்கிறோம். பாதுகாப்பிற்கென முதியர்களை தான் அவர்கள் நியமிக்கிறார்கள்.எங்களைப் பாதுகாக்க துப்பாக்கிகள் கூட அவர்களிடம் இல்லை.என்றும் அவர் தெரிவித்தார்.”