போதைப்பொருள் கொள்வனவு செய்யப் பணம் கிடைக்காமையால் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு, வீட்டில் குழப்பத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தருக்கு , வீட்டார் பணம் கொடுக்காததால், இவ்வாறு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவர், 05 வயது பிள்ளையின் தந்தை எனவும் அதீத போதைப்பொருள் பாவனையால், குடும்ப வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்ததால், அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.