மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் 20 இல்,இது தொடர்பில் தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 15 இல், நிறைவு பெறவுள்ளது.
இதற்கிணங்க மின் கட்டணங்களில் வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பில் எதிர்வரும் (20) தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண திருத்தத்தின்போது உச்சளவு நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.