டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் "பியுமா"வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டது முதல் 72 மணிநேரம் அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பியும் ஹஸ்திக அல்லது பியூமா, போதைப்பொருள் வியாபாரியான குடு சலிந்துவின் முக்கிய உதவியாளராக கருதப்படுகிறார்.
அவர் 09 பிப்ரவரி 2021 அன்று துபாய்க்க தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.