இராணுவத்தளபதி மருத்துவமனைக்கு விஜயம்..!!

tubetamil
0

 பாரசூட் சாகசத்தில், விழுந்து காயமடைந்த அதிகாரி மற்றும் படைவீரரின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே (30) கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

பாரசூட் சாகசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த இராணுவத் தளபதி, அவர்களிடம் தனித்தனியாக உரையாடி அவர்களது நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விரைவாக குணமடைய அவர் உறுதி வழங்கினார்.

76 ஆவது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது   கீழே விழுந்து இவர்கள் காயமடைந்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top