அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்று(22) இரவு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையினை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.