தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன், தாய் இறந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்துருவ அகடேகொட, கல்தரமுல்லவில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயான மெட்டில்டா என்பவர் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது ஐந்தாவது மகனான 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான லக்சிறி என்ற நபர் தாயின் மரணத்தால் ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனையடுத்து, தாய் இறந்த அன்றைய தினமே திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், தாய் மற்றும் மகனின் இறுதிக் கிரியைகள் நேற்று (24) முன்தினம் இடம்பெற்றுள்ளன.