நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சின் விசேட பிரதிநிதிகள் இன்று
யாழ்.சிவில் சமூக நிலையத்தில் விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டனர்.
வடக்கின் சாதிப்பிரச்சினை, ஐரோப்பிய அகதிகள் விசா விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடக்கின் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் தேசியப் பிரச்சினை எனப்படும் எமது பிரச்சினை தொடர்பாக உள்ளூர் தீர்வாக நாம் உருவாக்கிய “யாழ் உரையாடல்” Jaffna Discourse பிரேரனையும் டச்சுப் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.