எலி பிரச்சினையால் ஒருவர் பலி..!!

tubetamil
0

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வசிக்கும் வீட்டினுள் எலி புகுந்தது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மயங்கி விழுந்து   இளைய சகோதரர் சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்தை ஆராச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற (59) வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார், மூத்த சகோதரன் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசிப்பதாகவும், திங்கட்கிழமை (19) காலை இரண்டு மகள்களும் மனைவியும் சொந்த தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது  இரு சகோதரர்கள் மட்டுமே வீட்டில்  தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top