வீதியால் சென்ற இளைஞனை தாக்கிய காவல்துறையினர்!

keerthi
0


யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எனினும்     குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன்  வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்த போது சிவில் உடையில் வந்த அச்சுவேலி காவல் நிலைய உத்தியோகத்தர் என்னை நிற்குமாறு கூறினார்.

எனக்கு அன்று காய்ச்சல் மெதுவாகவே சைக்கிள் பயணித்ததால் அவர்கள் கூப்பிட்டது எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

எனினும், மோட்டார் சைக்கிளை எனக்கு முன்னால் நிறுத்தி இறங்கு எனக் கூறினார். ஏன் என கேட்டேன் என்னை முகத்தைப் பொத்தி அடித்தார்கள்.

மேலும், ஏன் விசாரணைக்காக காவல் நிலையம் வரவில்லை என கேட்க, காய்ச்சல் காரணமாக வரவில்லை என்றேன் மீண்டும் என்னை தாக்கினார்கள்.

நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னை தாறுமாறாக தாக்கிய இரு காவல்துறையினர் அருகில் இருந்த மதிலுடன் என்னை வீசி விட்டுச் சென்றார்கள்.இவ்வாறுஇருக்கையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு வந்தேன்.

அத்தோடு எனது ஒரு கால் முறிந்துள்ளதுடன் தாக்கிய காவல்துறையினர்  மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாதிக்கப்பட்ட இளைஞன்  தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top