யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் கந்தன் மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 லிட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலீசார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.