குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷிக தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குடு சலிந்து போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "அடுத்த சில மாதங்களில் போதைப்பொருள் கிடைப்பதை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டு வர முடியும். குடு சலிந்து 03 வருடங்களில் 5013 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளான். மடகஸ்கரில் இரண்டரை ஏக்கர் காணி உள்ளது, இலங்கை முழுவதும் காணிகள் உள்ளன. அத்துடன் 73 வாகனங்களும் உள்ளன பிறரின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு.
அந்த பட்டியல்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. சில வருடங்களில் அவர் வௌியே வரும் போது தெருவில் பிச்சை எடுக்க நேரிடும். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய சலிந்துவுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும" என்றார்.