கல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர்
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
" நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் நாட்டு மக்களின் பேச்சு உரிமை முடக்கப்பட்டுள்ளது. மறுபுறம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் செயற்பாடுகள் முறையற்றவை. இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்." என்றார்.