ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நான்காவது உலகளாவிய கால மீளாய்வில் உலகின் ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் இம்மீளாய்வு அமர்வின் போது ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் குறித்த பதிவுகள் மீளாய்வு செய்யப்படுவதோடு குறிப்பிடத்தக்க சிபாரிசுகள் வழங்கப்படும். இந்த உலகளாவிய கால மீளாய்வு அமர்வு இடம்பெற்ற சமயம் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக உய்குர் மற்றும் திபெத் செயற்பாட்டாளர்கள் தங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்தின் உலக உய்குர் காங்கிரஸ் தலைவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், அமைதியாக வாதிடுவதற்கும், எந்தவொரு தனிநபரும் அல்லது சமூகமும் பின்தங்கியிருக்கக் கூடாது” என்றுள்ளார்.