திருகோணாமலை மாவட்டத்தின் தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் ரயிலில் மோதி உயிரிழந்த்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
14 வயதான நலிம் முஹம்மது சப்ரித் என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது
கல்ஒயாவிலிருந்து திருகோணமலையை நோக்கிச் சென்ற கடுகதி ரயிலிலேயே குறித்த சிறுவன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் தனியாக மீன்பிடிக்க சென்றவேளை ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது இறந்த சிறுவனின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.