இருதய நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இதய நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் (ப்ரோக்லி) இல் குறித்த புழு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், புழு இருந்துள்ளதை நோயாளியின் மகள் வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வைத்தியசாலை உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.