முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் ஆமையினை இறைச்சிக்காக கொண்டு சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
நீண்டநாட்களாக ஆமையினை பிடித்து இறச்சிக்காக விற்பனை செய்துவரும் நபர் ஒருவரையே புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் 32 வயதுடைய 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த நபர் எனவும் அவரிடம் இருந்த ஆமையும் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சான்று பொருளையும் சந்தேக நபரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.