விஜய்யின் அரசியல் பயணத்துக்கு ஜீவன் வாழ்த்து..!!

tubetamil
0

 சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

"நடிகர் விஜய் சினிமாத் துறையில் உச்சம் தொட்டவர். அவருக்கென இரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதியென இரசிகர்கள் அவரைக் கொண்டாடும் அளவுக்கு சினிமாத்துறையில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நடத்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்ல தனக்காக உருவான இரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் ஊடாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.

இந்நிலையில் அப்பணிகளை மென்மேலும் முன்னெடுப்பதற்காகவும், சமத்துவம், சமூக நீதிக்காகவும் விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top