சுகாதார சேவை அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது.
மருத்துவர்களின் DAT கொடுப்பனவு 35000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள தொகை 50000 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல.
ஆனால் அதற்காக எங்களிற்கு வழங்கப்படும் 3000 ரூபா அப்படியே உள்ளது. மருத்துவ அதிகாரிகளுக்கு 35000 ரூபாவாக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், தமது கொடுப்பனவை அதிகரிக்கும் நோக்கில், இடைக்கால மருத்துவ கூட்டுப் படை வாரியம் இன்றைய தினமும் காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னேடுத்துவருகின்றனர்.