ஒருவர் வீட்டிலேயே 3 கஞ்சா செடி வரை வளர்ப்பதோடு தினமும் 25 கிராம் வரை உபயோகிக்கலாம் என ஜெர்மனி நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையும் தாண்டி அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டள்ளது.
இந்த சட்டத்திற்கமைய, ஒரு தனிநபர் ட்டிலேயே 3 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். மேலும், தினமும் ஒருவர் 25 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்தலாம்.
ஜெர்மனியில் சமீபக்காலமாக கஞ்சா பாவனையானது அதிகரித்து வருவதோடு, கருப்பு சந்தையில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.
இதனை தடுத்து சட்டபூர்வமாக்கும்போது, விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கிணங்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த சட்டத்திற்கு நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, நெதர்லாந்து நாடும் கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முனைப்பு காட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.