பிரிட்டிஷ் மன்னர் 3ஆம் சார்ள்ஸ் (Charles iii) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளை ஒத்திவைத்துள்ளதாகவும் பக்கிங்ஹம் மாளிகை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சார்ள்ஸ் மன்னருக்கு சிறுநீர் பையின் கீழுள்ள புரஸ்டேட் சுரப்பி பெரிதாகிய பிரச்சினை தொடர்பில் சிகிச்சை பெற்றிருந்தார்.