வடக்கு மாகாண ஆளுநர் ஏ.எம்.சார்ள்ஸ் மற்றும் வடக்கு கடற்படை பிராந்திய அதிகாரி அட்மிரால் காஞ்சன பானகோடா ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுதல், வடக்கு கடற்படை பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக வடக்கிலுள்ள சுற்றுலா தளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆளுநர், கடற்படை அதிகாரியிடம் இதன்போது கேட்டுகொண்டார்.