தமிழக சிறையில் உயிரிழந்த சாந்தனின் மரணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
நீண்ட சிறை வாழ்க்கையை கடந்து தாய் நாட்டிற்கு வருவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடும் தருணத்தில் சாந்தன் நோயினால் உயிரிழந்தமையானது வருத்தத்திற்கு உரியது என அங்கஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மகனின் வருகைக்காக காத்திருந்த தாயின் வேதனைக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனின் குடும்பத்தினருக்கு தமது இரங்களை தெரிவிப்பதாகவும், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.