நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்க மறியல் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு, சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் உணவுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவை பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவருக்குள்ள நோய் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரைக்கு இணங்க பெற்றுக் கொடுக்கப்படும் உணவு வகை வித்தியாசமாக காணப்படுவதால், வீட்டிலிருந்து அவருக்கு உணவை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கோரி வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கிணங்க சிறைச்சாலை மருத்துவர் அந்த அனுமதியை வழங்கியுள்ளார். அதன்படி நேற்று முதல் அமைச்சருக்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.