திடீரென காணாமல் போன கடல் - நடந்தது என்ன..?

keerthi
0



கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.

2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 

1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. 

இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. 

 அத்தோடு   ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top