மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டதில், சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், கீழே இருந்த இருந்து பெட்டகத்தின் பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த சிறுமியை சுட்டுள்ளனர்.
அதன் பின் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
திருடப்பட்ட பணம் குறித்த விபரம் இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த சிறுமி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.