எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று முதல் லங்கா சதொசவிற்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் என நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு அதிகபட்சமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டாலும் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத காரணிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளுக்கு தேவையான முட்டைகளை இருப்பு வைக்கும் போக்கு காணப்படுவதாகவும் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.