தமிழ் சினிமாவை பொறுத்தவரை நயன்தாராவை ஒரு லக்கி ஹீரோயின் ஆக பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பார்த்து வருகிறார்கள். அத்துடன் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் பலரும் இருக்கிறார்கள். அத்துடன் நயன்தாராவே ஹீரோயினாக போடுங்கள் என பல நடிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் வாரிசு நடிகர் ஒருவர் மட்டும் நயன்தாரா வேண்டவே வேண்டாம் என திட்டவட்டமாக கூறி வருகிறார். இவர் இந்த படத்தில் ஹீரோயினாக இருந்தால் நான் நடிக்க விரும்பவில்லை என போடும் முதல் கண்டிசனை இதுதான். அப்படியே சொல்லி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நயன்தாராவுக்குடன் இணைந்து நடிக்கவே இல்லை.
இடைப்பட்ட காலத்தில் ஒரு படம் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கூட அந்த நடிகர் ரொம்பவே பிடிவாதமாக இருந்ததால் நயன்தாராவிற்கு பதிலாக வேறு ஹீரோயினை போட்டு படத்தை எடுத்தார்கள். அப்படி பிடிவாதமாக இருக்கும் ஸ்டைலிஷ் ஹீரோ யார் என்றால் அல்லு அர்ஜுன். அதாவது இவர் 2016 ஆம் ஆண்டு அவார்டு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.