நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புதிய அத்தியாயத்திற்கு நல்வாழ்த்துக்கள் என தனது X தளத்தில் நாமல் ராஜபக்ச பதிவொன்றை இட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என இன்று அறிவித்திருந்தார்.
2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.