முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
நாட்டுக்கு 22,500 தரமற்ற தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. இந்தநிலையில், அவரை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனபடிப்படையில் அவர் திணைக்களத்தில் முன்னிலையாவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சுற்றாடல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.